பெண்ணிடம் 5 சவரன் செயின் பறிப்பு
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் பகுதியில் பெண்ணிடம் செயின் பறித்து சென்றது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் சிவகணபதி நகரை சேர்ந்தவர் பெருமாள் மனைவி செல்வி,52; இவரது மகன் விக்னேஷ்வர், சென்னையில் பி.எச்.டி., படித்து வருகிறார். சனி, ஞாயிறு விடுமுறைக்கு விக்னேஷ்வர் புதுச்சேரிக்கு வந்தார். மீண்டும் விக்னேஷ்வர் சென்னை செல்ல, புதுச்சேரி புது பஸ் ஸ்டாண்ட்டில் செல்ல செல்வி இறக்கிவிட்டு வந்தார்.
அதிகாலை 4.30 மணிக்கு ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் அருகில் வந்தபோது, பின்னாள் பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் செல்வி அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இது குறித்து செல்வி அளித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் சந்திக்க தயார்; அமைச்சர் செங்கோட்டையன்
-
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு; 3வது நாளாக முதல்வர் விஜய் ஆலோசனை
-
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை; குண்டுவெடிப்புகள், சாலை மறியல்கள், தீ வைப்பு சம்பவத்தால் பரபரப்பு
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; பெயர் சேர்க்க டிச.,11 வரை அவகாசம்
-
டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி
-
சோனியா சுயசரிதையில் 55 பிழைகள்!
Advertisement
Advertisement