பைக் திருட்டு: வாலிபர் கைது

திண்டிவனம்: திண்டிவனத்தில் பைக் திருட்டு வழக்கில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம், மரவாடியான் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் மகன் தனுஷ், 21; இவருக்கு சொந்தமான யமஹா பைக் கடந்த 30ம் தேதி திருடு போனது. இதுகுறித்து தனுஷ் திண்டிவனம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில், திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமம் பள்ளத்தெருவைச் சேர்ந்த பொய்யாதப்பன் மகன் மணிகண்டன், 21; என்பவர் பைக்கை திருடியது தெரியவந்தது.

அவரை பிடித்து விசாரித்ததில், தனது கூட்டாளிகளான சென்னையைச் சேர்ந்த 4 பேருடன் பேருடன் சேர்ந்து திண்டிவனம் உட்பட பல்வேறு இடங்களில் பைக்குகறை திருடியது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து மணிகண்டனை நேற்று போலீசார் கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 4 பேரையும் தேடி வருகின்றனர்.

Advertisement