சேர்ந்து வாழ மனைவி வராத விரக்தி கணவர் தற்கொலை
கொடுங்கையூர்: சேர்ந்த வாழ மனைவி வராத விரக்தியில், கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் முத்தியார், 25; த.வெ.க., கட்சி நிர்வாகி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும், மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
ரகசியமாக திருமணமும் செய்து, பின் ‘அலைபாயுதே’ பட பாணியில் இருவரும், அவரவர் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தங்களின் திருமணத்தை பெற்றோரிடம் தெரிவித்து, தனி வீட்டுக்கு குடித்தனம் போகலாம் என, முத்தியார் மனைவியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு அப்பெண் சம்மதிக்கவில்லை.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட முத்தியார், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தன் மகனின் தற்கொலைக்கு அவர் திருமணம் செய்த பெண்ணே காரணம் என முத்தியாரின் பெற்றோர், கொடுங்கையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
மின் சேமிப்பு திறன் மேம்பாட்டுக்காக ரூ.14,500 கோடி நிதி ஒதுக்கீடு: ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை
-
புழுதியூரில் ரூ.2.70 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
-
விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம்
-
238 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
-
புதிய பட்டுக்கூடு அங்காடி காணொலி மூலம் திறப்பு
-
சம்பளம் கேட்டு பஞ்., ஆபீஸ் முன் துாய்மை பணியாளர் தர்ணா