‘மஹாதேவ்’ சூதாட்ட செயலியின் மற்றொரு நிர்வாகி துபாயில் கைது
புதுடில்லி: ‘மஹாதேவ்’ ஆன்லைன் சூதாட்ட செயலியின் இணை நிறுவனரான ரவி உப்பலை, துபாய் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை மேற்கொண்டு வருகின்றன.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் நகரை சேர்ந்த சவுரப் சந்திராகர், ரவி உப்பல் ஆகியோர் இணைந்து 'மஹாதேவ் ஆன்லைன் புக்' என்ற சட்டவிரோத சூதாட்ட செயலியை நடத்தி வந்தனர். இந்தச் செயலி மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்ததாக 2023ல் புகார் எழுந்தது. இதையடுத்து சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. மஹாதேவ் செயலி மட்டுமின்றி 'ஸ்கைஎக்ஸ்சேஞ்ச், லோட்டஸ் 365' உள்ளிட்ட இணையதளங்கள் மூலம் 94 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டப்பட்டதாகவும், அதில் 4,000 கோடி வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ், 2023, ஆக., தொடங்கி கடந்தாண்டு ஜூலை வரை 14 பேர் கைது செய்யப்பட்டனர். ஓமனில் கைது செய்யப்பட்ட மஹாதேவ் செயலியின் நிறுவனரான சந்திராகர், கடந்த 1ம் தேதி இந்தியா அழைத்து வரப்பட்டார். இந்நிலையில், இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு வெளியிட்ட நோட்டீஸ் மூலம், ‘மஹாதேவ்’ செயலியின் இணை நிறுவனரான ரவி உப்பால், நேற்று துபாயில் கைது செய்யப்பட்டதாக சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர். அவரை நாடு கடத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
மேலும்
-
டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி
-
சோனியா சுயசரிதையில் 55 பிழைகள்!
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்
-
கலெக்டருக்கு டார்ச்சர்; கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது டிஜிபியிடம் அதிமுக புகார்