மருத்துவப் பயிற்சி முகாம்
ஒட்டன்சத்திரம்: இந்திய குழந்தைகள் நலச்சங்கம் திண்டுக்கல், மதுரை மாவட்ட கிளைகள் சார்பில் சிறப்பு பயிற்சி முகாம் ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் மருத்துவமனையில் நடந்தது. டாக்டர் லெனின்குமார் தலைமை வகித்தார். நலச்சங்க திண்டுக்கல் கிளை பொருளாளர் அம்புரோஜ் முன்னிலை வகித்தார். டாக்டர் ரமேஷ் உள்ளிட்டோர் பேசினர்.
டாக்டர்கள் பால், ஜெனித் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பயிற்சி அளித்தனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் இமானுவேல், ஐ.எம்.ஏ., கிளைச் செயலாளர் ஆசைத்தம்பி ஆகியோர் முகாமில் பயிற்சி பெற்ற செவிலியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாகிகள், சமுதாயப் பணியாளர் கார்த்திக் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement