ரயிலில் துாங்க நேர கட்டுப்பாடு; ரத்து செய்ய கோர்ட் மறுப்பு
சென்னை: முன்பதிவு செய்யப்பட்ட, படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில், இரவு 10:00 மணி முதல், காலை 6:00 மணி வரை மட்டுமே துாங்க அனுமதி என்ற உத்தரவை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் எஸ்.பாலசுப்பிரமணியன். இவர் உடல் நலம் சரியில்லாத, தன் மனைவியுடன் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது, முன்பதிவு செய்யப் பட்ட படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில், இரவு 10:00 மணி முதல், காலை 6:00 மணி வரை மட்டுமே துாங்க அனுமதிக்கப்படுவர் என்ற உத்தரவை காரணம் காட்டி, பாலசுப்பிரமணியனின் மனைவிக்கு, படுக்கை வசதியை பயன்படுத்த, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக, 2017ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி, பாலசுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: முன் பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில், இரவு 10:00 மணி முதல், காலை 6:00 மணி வரை மட்டுமே துாங்க அனுமதிக்கப்படுவர் என்ற உத்தரவு அமலில் இருந்தாலும், கர்ப்பிணியர், உடல் நலம் பாதிக்கப்பட்டோர், எந்த நேரத்திலும் துாங்க அனுமதிக்கும் விதிகள் உள்ளன.
அந்த விதி அமலில் இருக்கும் நிலையில், மனுதாரர் உதவிக்கு ரயில்வே போலீசார் அல்லது பணியில் இருக்கும் ரயில்வே ஊழியர்களை அழைத்திருக்கலாம். ஆனால், மனுதாரர் அவ்வாறு செய்யாமல், விதியை எதிர்த்து மனு தாக்கல் செய்து உள்ளார். மனுதாரர், ரயில்வே நிர்வாகத்தை அணுகலாம். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அப்படியே மொபைல் உபயோகிப்பதற்கும் இரவு நேரத்தில் கட்டுப்பாடு போடுங்கள்.
இளசுகள், சிறுசுகள் தொல்லை அதிகம்
மனுதாரர் உதவிக்கு ரயில்வே போலீசார் அல்லது பணியில் இருக்கும் ரயில்வே ஊழியர்களை அழைத்திருக்கலாம் என்கிறது கோர்ட் .... உடல்நிலை சரியில்லாத மற்றொரு பயணியை வைத்துக்கொண்டு அவர் ஏன் அலையவேண்டும் ?? தவிர தொலைபேசியில் அழைத்தாலோ, ஆப் பயன்படுத்தி அழைத்தாலோ அவர்கள் ஓடிவந்து சேவை செய்யும் நிலையா இருக்கிறது ??
சார், உங்க கணக்குக்கே வரேன். ஹௌரா மெயில் இரவு 11.20 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்புகிறது. டிக்கெட் செக்கிங் வரும்வரை முழித்து இருக்கவேண்டும். அதாவது தோராயமாக நள்ளிரவு 12 - 12.30 மணிவரை விழித்து இருக்கவேண்டும். அதன்பிறகு தூங்கவேண்டும். எப்படி 6 மணிக்கு எழுந்திரிக்க முடியும். இடைப்பட்ட ஸ்டேஷன்களில் பலபேர் வித்தவுடில் ஏறி உட்காரவருகின்றனர். அவர்கள் ரெசெர்வ் செய்தமாதிரி கொஞ்சம் உக்காருங்க இடம் கொடுங்க என்று உரிமையோட கேட்கிறார்கள். அது எப்படி நியாயம் ஆகும். என் அனுபவத்தை சொல்கிறேன். எர்ணாகுளம் பாட்னா , எர்ணாகுளம் தன்பாத் எக்ஸ்பிரஸ் இப்படி நள்ளிரவு கிளம்பும் ட்ரைனிலும் இதே நிலைமைதான். நீதிபதிகள் இதில் பயணம் செய்தால் நல்ல அனுபவம் கிட்டும்.
இரயிலில் படுத்து செல்வதிற்கு வசதிக்காக தான் ஸ்லீப்பர் coach புக் செய்கிறார்கள். அதில் 10 டு 6 தான் படுக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்வதில் தர்மம் இல்லை. பயணியர் அதற்கான கட்டணம் செலுத்தி தான் பயணிக்கிறார்கள். வேண்டும் என்றால் உட்கார்ந்து வர விரும்புவர் சக பயணியிடம் கேட்டு கொண்டு உட்கார்ந்து வரலாம். இந்த மாதிரி பிரச்சனை நீண்ட தூர பயணங்களில் ஏற்படுகிறது. அப்போது ஸ்லீப்பர் கொச்சி தூங்குவதற்கே முன்னுரிமை தர வேண்டும். தேவையானால் ரயில்வேயிடம் சொல்லி எல்லா ரயில்களிலும் சீட்டிங் coach அதிகரிக்க சொல்லலாம் அல்லது ஸ்லீப்பர் கோச்சில் உட்கார்ந்து செல்ல 2 ரோ தனியாக ஒதுக்க சொல்லலாம். அல்லது காலை 7 டு 9 மதியம் 1 டு 3 மாலை 6 டு 8 மொத்தம் 6 மணி நேரம் உட்காருவதற்கு இடம் கொடுக்க விதி அமைக்கலாம். பொதுவாக ரயில் பயணியர்களே சக பயானியர்களின் தேவை அறிந்து அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார்கள் பிரச்சனை ஒரு சிலருக்கே.
கிறுக்கு தனமான தீர்ப்புகளை வழங்குவதற்கு தான் இந்த நீதிமன்றங்கள் உள்ளது... ஸ்லீப்பர் டிக்கெட் இரவுக்கு மட்டுமே பொருந்தும் பகலுக்கு அமர்ந்து செல்லும் தொகையை தான் வசூலிக்க வேண்டும் அதற்கும் சேர்த்து தான் வசூலிக்கிறீங்க...வர வர நீதிமன்றங்கள் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்ய ஒரு உபயோகமில்லாத அமைப்பாக மாறிவருகிறது
பகல் நேரத்தில் பயணிகள் சார்பில் தூங்குவதற்கு தேவையான ரயில்வே ஊழியர்களை நியமிக்க வேண்டும்.
பயணசீட்டுப் பரிசோதகரோ அல்லது இரயில்வே போலீஸ் காரரோ அங்கு இருப்பதேயில்லை.
பயணிகள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டும். கண்ணால் பார்க்கும் யாரும் உதவி செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. டிக்கெட் பரிசோதகர் , காவலர்கள் உதவி செய்ய வருவார்கள்.
சூப்பர்
தமிழ் நாட்டில் மாறாது மலராது ?? வட நாட்டிலும் மலர்ந்து வாடி வதங்கி கொண்டு இருக்கிறதுங்கண்ணா??மேலும்
-
மின் சேமிப்பு திறன் மேம்பாட்டுக்காக ரூ.14,500 கோடி நிதி ஒதுக்கீடு: ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை
-
புழுதியூரில் ரூ.2.70 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
-
விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம்
-
238 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
-
புதிய பட்டுக்கூடு அங்காடி காணொலி மூலம் திறப்பு
-
சம்பளம் கேட்டு பஞ்., ஆபீஸ் முன் துாய்மை பணியாளர் தர்ணா