ராகுல் அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன்?: அந்துமணி பதில்கள்

2

@block_B@தி.அ.பாலசுப்ரமணியன், நெல்லை:

'பாரா' ஆசிய விளையாட்டுப் போட்டியில், கடந்த முறைகளை விட, அதிக பதக்கங்களை வென்று, நம் நாடு சாதனை படைத்துள்ளது, நமக்கு பெருமிதம் தானே!

block_Bமிகவும் பெருமிதம் விஷயம் இது! குக்கிராமங்களிலிருந்தும், பராக்கிரமத்துடன் விளையாடக் கிளம்பும் இவர்களை, சரியான முறையில் வழிப்படுத்தி, போதிய வசதிகள் செய்ய மத்திய - மாநில அரசுகள் முயல்கின்றன; ஆனாலும் சில நடைமுறைச் சிக்கல்களைத் தீர்த்து வைத்தால், மேலும் பல வீரர்கள் வெளிச்சத்திற்கு வருவர்!

@block_Y@பா.கோபாலகிருஷ்ணன், கேரளா:

பிரான்ஸ் நாட்டில் ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக வந்தால் கூட ரயில்வே நிர்வாகம், பயணச்சீட்டின் மொத்த தொகையையும் பயணியருக்கு திருப்பிக் கொடுத்து விடுமாமே... உண்மையாகவா அந்துமணி?

block_Yமுப்பது நிமிடங்களுக்கு மேல் தாமதமானால், 25 சதவீத தொகையை அளிக்கும். நேரம் கூடக் கூட, தொகையும் கூடும். இந்தியாவில் இப்படி ஒரு சட்டம் வந்தால், ரயில்வே துறை, பல கோடிகளில் பணத்தைத் திருப்பி கொடுக்க வேண்டி இருக்கும்.

@block_P@தக்கலை லீலாராம், கன்னியாகுமரி:

சீனாவில் நடிகர்களுக்கு பதிலாக விஞ்ஞானிகளின் படங்கள் பிரமாண்டமாக காட்சிக்கு வைத்து, விஞ்ஞானிகளை குழந்தைகளின் முன் உதாரணமாக்குகின்றனராமே?

block_Pநல்ல முன்னெடுப்பு; மாணவர்களுக்கு உத்வேகமாக இருக்கும். நம்மூரிலும் இப்படி விஞ்ஞானிகளின் படங்கள் வைக்கப்பட்டால், நம் மக்கள் அவற்றுக்கு பாலாபிேஷகமே செய்வரே!

@block_G@சங்கை கோபால், சென்னை:

வறுமை நிலை, 27.1 சதவீதத்திலிருந்து 2.6 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் நம் இந்தியா வல்லரசு நாடாக வர சாத்தியம் உள்ளதா?

block_Gநம் இந்தியா, உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு, பல துறைகளில் சாதித்து வருகிறது. விரைவில் வல்லரசாக வலு பெறும்.

@block_B@எல்.கீதா, துாத்துக்குடி:

கடந்த 20 மாதங்களில் மட்டும் மூன்று முறை வியட்நாம் நாட்டுக்கு காங்., ராகுல் சென்று வந்துள்ளாராமே... அந்நாட்டில் அப்படி என்ன தான் இருக்கிறது?

block_Bவியட்நாம் வேகமாக வளர்ந்து வரும் நாடு. இன்று உலகமே பேசும், 'செமி கண்டக்டர்' எனும், மின்சார விநியோகத்தில் உபயோகப்படுத்தப்படும் கருவியின் ஒரு பாகம் உட்பட பல புதிய பொருட்களை உற்பத்தி செய்கிறது. அதனால் ராகுல் அங்கு முதலீடுகள் செய்வதற்காக சென்றிருப்பார். கஞ்சா கூட அமோகமாக விற்கப்படுகிறது; புரிந்து கொள்ளுங்கள் கீதா!

@block_Y@மு.கருப்பசாமி, சென்னை:

'பொதுவாழ்வில் உள்ளவர்கள் விமர்சனங்களையும், கேலிகளையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்...' என்று, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு குறித்து?

block_Yவிமர்சனத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்பது சரிதான். ஆனால் விமர்சிப்பவர்கள் தரம் உணர்ந்து பேச வேண்டும் என்பது தான் பலரின் ஆதங்கம்.

Advertisement