மதுரை சிறையில் காவலர் மீது கைதி கொடூர தாக்குதல்; உயிர் பயத்தில் காவலர்கள்
மதுரை: மதுரை சிறையில், குடிநீரில் குளிக்க முயன்ற தைக் கண்டித்து, வாளியை பறித்த தலைமைக் காவலர் தெய்வநாயகம், 52, என்பவரை தாக்கிய மூர்த்தி, 35, என்ற கைதியால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை சிறையில் 2,000த்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். அங்கு, நேற்று காலை குளிப்பதற்காக, விசாரணை கைதிகள் உள்ள பகுதியில் நுாற்றுக்கணக்கான கைதிகள் கூடினர். அப்போது, பாதுகாப்புக்கு நான்கு காவலர்கள் தான் இருந்தனர். கைதிகள் குளிக்க ஆழ்குழாய் நீர் உள்ள நிலையில், கைதி மூர்த்தி என்பவர், குடிநீரில் குளிக்க வாளியில் தண்ணீர் பிடித்தார். இதைக் கவனித்த தலைமைக் காவலர் தெய்வநாயகம், கைதியைக் கண்டித்து வாளியைப் பறித்தார்.
ஆத்திரமடைந்த மூர்த்தி, தன் கைகளால் தெய்வநாயகத்தின் முகத்தில் குத்தினார். இதில், தெய்வநாயகத்தின் கண்கள் பாதிக்கப்பட்டன. அருகில் இருந்த சில கைதிகள் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னர் வந்த சக காவலர்கள், தெய்வநாயகத்தை சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர். கைதி மூர்த்தியிடம் விசாரணை நடக்கிறது.
சிறைக் காவலர்கள் கூறுகையில், 'தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பியதால், மதுரை சிறையில் காவலர்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாங்கள் விழிப்புடன் பணிபுரிவதால் கைதிகள் ஆத்திரத்தில் உள்ளனர்.
'கைதிகளின் மிரட்டலால் அச்சத்தில் உள்ளோம். எங்களைத் தாக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுவே கைதிகளுக்கு பாதிப்பு என்றால் மனித உரிமை கமிஷன், தன்னார்வ அமைப்புகள் குரல் கொடுக்கின்றன. நாங்கள் பாதிக்கப்பட்டால், எங்கள் துறை அதிகாரிகள் கூட ஆறுதலாக பேசுவது இல்லை.
25 ஆண்டுகளுக்கு முன் சிறையில் ஒரு அதிகாரி எரித்துக் கொல்லப்பட்டார். அதுபோல் மீண்டும் ஏற்படாமல் இருக்க, அதிகாரிகள், தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்றனர்.
அடுத்த சிறையில் கைதிகள் தப்புவதை கேட்கும் போது இவர்களுக்கும் ஒரு விதமான மன தைரியம் வந்து விடுகிறது. சிறைத்துறை அமைச்சர் நிர்வாகத்தில் கவனம் செலுத்தாமல் சதா சர்வகாலமும் எதிர்கட்சிகளை பேசுவதிலேயே தனது நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கிறார்.
திராவிட மாடல் 1 ஐ மிஞ்சி சாதனை படைக்கிறது திராவிட மாடல் 2 ஆட்சி ........
இது போன்ற கைதிகளை உடனடியாக 10 நாட்களுக்கு இருட்டறையில் அடைத்து பட்டினி போட வேண்டும் அல்லது உடனடியாக என்கவுண்டரில் போட்டு தள்ள வேண்டும்.
அங்க நடக்கற விஷயத்தை விட நீங்க போடுற title தான் ரொம்ப பயமா இருக்கு
உயிர் பயத்தில் காவலர்கள் சூப்பர் படிக்கவே ஆனந்தமாக உள்ளது இந்த எழவெடுத்த ஈனத்தர தற்குறிகள் வெத்துவேட்டு கழக கும்பல் ஆட்சியை ஏன் தற்குறிகள் வெத்து வேட்டு என வர்ணிக்கிறார்கள் என்பதற்கு இதுக்கு மேல் காரணம் தேவையில்லை பயந்தால் காவலர்கள் அனைவரும் சிறையிலிருந்து தப்பித்து வீட்டிற்கோ அல்லது காவல் நிலையத்துக்கோ சென்று தஞ்சமடையலாம் இந்திய ராணுவத்தைத்தான் இனி தமிழ்நாட்டில் இறக்க வேண்டும் நான் காவல்துறையை கேவலப்படுத்தவில்லை இந்த துறை உட்பட மொத்தம் 18 துறைகளை கையில் வைத்திருக்கும் திருவாளர் மாண்புமிகு கையாலாகாத ஒருவரின் அபிரிதமான மாற்றத்தை பார்த்து நாடே சந்தி சிரிக்கிறது உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயத்தை கூட ஒழுங்காக வாங்கி விநியோகம் செய்ய தெரியாத இந்த வக்கற்ற பொல்ல அரசு மக்களின் உயிரை மானத்தை கூந்தல் மாதிரி பாதுகாக்கிறது அறுக்கத் தெரியாதவன் கையில் அம்பத்தெட்டு அறுவாளாம் 18 துறைகளில் ஏதாவது ஒரு துறையாவது ஒழுங்காக உள்ளதா? நேற்று ஏதோ ஒரு அணுமின் நிலைய விபத்தால் 2500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி பாதிப்பு என செய்தி வந்தது இதற்கும் திருட்டு முன்னேற்றக் கழகம் மட்டுமே காரணம் என்று வழக்கம் போல உருட்டுவான் ஒரு உளறல் வாயன் இன்றைய உளறல் கொமாரின் உளறல் பழி போடும் பேட்டிக்காக "ஐ எம் வெயிட்டிங்"
கிடாக்கள் என்கிற கைதிகளை லஞ்சம் என்கிற காசுக்காக வளர்த்து விட்ட காவல் காரர்களும் அரசியல் வாதிகளும் வரும் காலத்தில் அந்த கிடாக்களின் கொம்புகளால் மார்பில் குத்தி வீழ்த்த படுவார்கள்...
காவலர்கள் எண்ணிக்கையை காட்டிலும் கைதிகள் எண்ணிக்கை கூட இது போல கொடூர கைதிகள் காவலர்களை தாக்க முயன்றால் சுடுவதற்கு அதிகாரம் வழங்க வேண்டும். ஒரு நேர்மையான காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லாத துறை.மேலும்
-
கோபுரத்தை சுத்தம் செய்யும் பணிக்கு நந்தி வாகனத்தை பயன்படுத்தியதால் சர்ச்சை
-
மின் சேமிப்பு திறன் மேம்பாட்டுக்காக ரூ.14,500 கோடி நிதி ஒதுக்கீடு: ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை
-
புழுதியூரில் ரூ.2.70 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
-
விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம்
-
238 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
-
புதிய பட்டுக்கூடு அங்காடி காணொலி மூலம் திறப்பு