நிறுவன செய்திகள்
விமான சேவை திட்டம் இல்லை அதானி ஏர்போர்ட்ஸ் சி.இ.ஓ.,
“விமான நிலையங்களுக்கு விமான போக்குவரத்து நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள்; அவர்களுடன் போட்டியிடுவது சரியான வணிக உத்தியாக இருக்காது என்பதால், விமான சேவைத் துறையில் நுழையும் திட்டம் இல்லை,” என அதானி ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் தலைமை செயல் அதிகாரி அருண் பன்சால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பிளிக்ஸ்' பிராண்டு நிறுவனத்தில் மேரிகோ ரூ.1,012 கோடி முதலீடு
நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான மேரிகோ, 'பிளிக்ஸ்' பிராண்டு உரிமையாளரான சத்யா நியூட்ராசூட்டிகல்ஸில் தனது பங்குகளை, 1,012 கோடி ரூபாய் முதலீட்டில் 84.09 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மேலும்,
சர்வதேச வர்த்தகம் விரிவாக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் வாயிலாக 20,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
ரூ.9,500 கோடி திரட்ட கோல் இந்தியா திட்டம்
கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான மஹாநதி கோல்பீல்ட்ஸ், பங்கு வெளியீடு வாயிலாக 9,500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கான முதலீட்டாளர் சந்திப்புகளை இந்நிறுவனம் நடத்த துவக்கியுள்ளது. நவம்பர் இரண்டாவது பாதியிலோ, அல்லது டிசம்பர் துவக்கத்திலோ
பங்கு வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் தரவு கசிவு ஏ.யு., வங்கி விசாரணை
ஏ.யு., ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் வாகன கடன் வாடிக்கையாளர்கள் 28.5 லட்சம் பேரின் தகவல்கள் கசிந்திருக்கலாம் என எழுந்துள்ள சந்தேகம் குறித்து, சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் விசாரணை நடத்தி வருகின்றன.வங்கியின் மற்ற தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் சேவைகள்பாதிக்கப்படவில்லை என அந்த வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க எண்ணெய் வாங்கும் பாரத் பெட்ரோலியம்
பாரத் பெட்ரோலியம் நிறுவனம், அமெரிக்காவில் இருந்து டபிள்யு.டி.ஐ., வகையை சேர்ந்த 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது. வரும் டிசம்பர் இறுதியில் மும்பை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட உள்ள இந்த எண்ணெய், பிரென்ட் கச்சா எண்ணெய் விலையை விட பேரலுக்கு
18 டாலர் கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.




மேலும்
-
அரசு வீடுகளில் தனியாரை வெளியேற்ற நோட்டீஸ்! உள்வாடகை மோசடிக்கு முடிவுகட்ட வேட்டை
-
பக்தர்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன்
-
ராஜஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு; ரயில்கள் ரத்து
-
எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் வேட்புமனு நிராகரிப்பு; போட்டியின்றி எம்பியாகிறார் ஹர்தீப் சிங் புரி
-
டிரைவருக்கு வலிப்புவிபத்தில் சிக்கிய கார்
-
பனை விதைகள் நடவு