இருப்பது 34 ஆயிரம் இருக்கைகள்; டிக்கெட் கேட்டு 84 லட்சம் விண்ணப்பங்கள்: இந்தியா- பாக் போட்டிக்கு எகிறும் எதிர்பார்ப்பு
நமது நிருபர்
2027 ல் ஐசிசி ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை தென் ஆப்ரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இத்தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. இந்தியா பாகிஸ்தான் அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. தென் ஆப்ரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க்கின் வாண்டரர்ஸ் மைதானத்தில் இரு அணிகளும், அக்டோபர் 10ம் மோதுகின்றன.
இம்மைதானத்தில் 34 ஆயிரம் பேர் மட்டுமே அமர முடியும். ஆனால், இப்போட்டியை பார்க்க 83,97,294 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வழக்கமாக சர்வதேச கிரிக்கெட்டில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு வரவேற்பு அதிகம் இருக்கும். அதுவும் உலக கோப்பை என்றால் தனி மவுசு உண்டு. அடுத்தாண்டு நடக்கும் போட்டிக்கு கிடைத்த வரவேற்பை கண்டு ஐசிசி மகிழ்ச்சியில் உள்ளது.
அதேபோல், இம்மைதானத்தில் நடக்கும் பைனலை பார்க்க சுமார் 79 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு என இதுவரை 12 கோடி பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக கோப்பை போட்டியை பார்க்க விரும்பும் ரசிகர்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும். அதிகம் பேர் விண்ணப்பித்தால் குலுக்கல் முறையில் டிக்கெட் உறுதி செய்யப்படும். முதலில் வருபவர்களுக்கு முதலில் டிக்கெட் என்ற முறை பின்பற்றப்பட மாட்டார். விண்ணப்பம் பதிவு செய்வதற்கு பணம் செலுத்த தேவையில்லை. அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்ட பிறகு, அதற்கான விபரம் ரசிகர்களுக்கு அவர்கள் பதிவு செய்துள்ள இமெயிலுக்கு அனுப்பப்படம் என ஐசிசி கூறியுள்ளது.
மேலும்
-
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் சந்திக்க தயார்; அமைச்சர் செங்கோட்டையன்
-
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு; 3வது நாளாக முதல்வர் விஜய் ஆலோசனை
-
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை; குண்டுவெடிப்புகள், சாலை மறியல்கள், தீ வைப்பு சம்பவத்தால் பரபரப்பு
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; பெயர் சேர்க்க டிச.,11 வரை அவகாசம்
-
டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி
-
சோனியா சுயசரிதையில் 55 பிழைகள்!