மிரட்டியே பண வசூலித்தாரா அரசகுமார்? எனக்கு தெரியாது என்கிறார் மகேஷ்
சென்னை: மாவட்ட வாரியாக கூட்டம் நடத்தி, தனியார் பள்ளி நிர்வாகிகளை மிரட்டி, அரசகுமார், முத்துகுமார் உள்ளிட்டோர் பணம் வசூல் செய்தது எனக்கு தெரியாது என, திமுக, முன்னாள் அமைச்சர் மகேஷ், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக, 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக, பள்ளிக்கல்வி முன்னாள் அமைச்சர் மகேஷ், 48, கைதாகி, 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்கப்படுகிறார்.
அவர் அளித்துள்ள வாக்குமூலம்:
திமுகவின் செய்தி தொடர்பு குழு துணை செயலராக அரசகுமார் உள்ளார். அவர், தனியார் பள்ளிகள் சங்கத்தை நடத்தினார். அது, பதிவு செய்யப்படாத சங்கம் என எனக்கு தெரியாது.
தனியார் பள்ளி நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று, அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசி, 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரத்தை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இது, தனியார் பள்ளிகளிடம் பணம் வசூல் செய்வதற்கான ஏற்பாடு என, என் மீது பழி போடுவதில் உண்மை இல்லை.
தனியார் பள்ளி சங்க நிர்வாகி என்ற அடிப்படையில், அரசகுமாரும், முன்னாள் எம்எல்ஏ மற்றும் பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்க துணை தலைவராக இருந்த முத்துகுமாரும் என்னை பல முறை சந்தித்து கோரிக்கை அளித்து உள்ளனர்.
அது பற்றி நான் தனிப்பட்ட முறையில் எவ்வித முடிவும் எடுக்கவில்லை. அரசகுமார், முத்துகுமார் ஆகியோர், நாங்கள் நினைத்தால் மட்டுமே, தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்று தர முடியும் என மிரட்டி, பல கோடி ரூபாய் வாங்கி இருப்பதாக கூறுவதற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
தனியார் பள்ளி நிர்வாகிகளுடன், மாவட்ட வாரியாக கூட்டம் நடத்தி, அரசக்குமார் கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததும், அதற்கு முத்துகுமார் உடந்தையாக இருந்தார் என்பதும் எனக்கு தெரியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜெய் பீம் படத்துல வர மாதிரி எனக்கு தெரியாது ஞபாகம் இல்லைனு வக்கீல் சொல்லி குடுத்துருப்பான் .அதான் அப்படியே கக்காரார் .
Even a child will not believe him
கரூர் சம்பவத்தில் மக்கள் இறப்புக்காக கதறி அழுதவர், தனக்கே பிரச்னை வரும்போது சிரித்தபடி வண்டியில் ஏறுகிறார், கோர்ட்டுக்கு வருகிறார் ..... அந்த அளவுக்கு வெள்ளை உள்ளம் படைத்தவர் என்பதை ஏன் சங்கிகள் உணர மறுக்கின்றனர் ??
மகேஷுக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்டவில்லையா லஞ்ச ஒழிப்புத்துறை ??
ஒன்னும் மிரட்ட மிரட்ட தேவை இல்லை - - - ஒரு இருபது வருஷத்துக்குள்ள ஆரம்பித்த தனியார் மெட்ரிக் சீபீசீ , பள்ளிகள் , கல்லூரிகள் , மெடிக்கல் - இன்ஜினீரிங் பாராமெடிக்கல் , மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் , எல்லாரும் தாங்களாகவே பண மூட்டையை கொண்டு வந்து கொட்ட தயாராத்தான் இருக்கிறார்கள் - - - , என்னா , மக்களிடம் அடிக்கும் கொள்ளை அப்டி - ஷோலே படத்து கப்பர் சிங் போல - பாஷா படத்தில் வரும் - கல்லூரி முதல்வர் போல - - -
அவர்களை அடக்க - ஒரு ஸ்பெஷல் ரூல்ஸ் போட்டு , அதை நடைமுறைப்படுத்த - சிங்கப்பெண் படை போல - ஒரு தங்கப்பெண் படை - டீமை போட்டு - கட்டண கொள்ளை அடிக்கும் பள்ளி - கல்லூரிகளுக்கு பெரிய ஆப்-பை அடித்தால் , மக்களிடம் பெரிய பெயர் எடுக்கலாம் - காமராஜருக்கு அடுத்து , , ,,
நல்ல நாடகம். ஒரு அமைச்சராக இருந்தவருக்கு ஒன்றுமே தெரியாதாம். இதை மக்கள் நம்ப வேண்டும். மக்களை அறிவீலிகள் என்று நினைக்கிறாயா
மகேஷில் "கேஷ்" இருப்பதை வைத்துக்கொண்டு என்னை எப்படி விசாரிக்கலாம் என்று கூட மிரட்டுவாபப்ல...
சரி, அது உனக்குத் தெரியாது. எப்படி இத்தனை ஆயிரம் கோடி கிடைத்தது என்ற கேட்கவில்லையா? அதை இணைவி வீட்டுக்கு அள்ளிக் கொடுக்கும் போது தெரியவில்லையா?
ரொம்ப பாவம். இந்த திருடனுக்கு ஒன்னுமே தெரியாது. திராவிடம் ஒன்றே அறிந்தவன்.
2 ஆண்டுகளா, 20 ஆண்டுகளா?
200மேலும்
-
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் சந்திக்க தயார்; அமைச்சர் செங்கோட்டையன்
-
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு; 3வது நாளாக முதல்வர் விஜய் ஆலோசனை
-
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை; குண்டுவெடிப்புகள், சாலை மறியல்கள், தீ வைப்பு சம்பவத்தால் பரபரப்பு
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; பெயர் சேர்க்க டிச.,11 வரை அவகாசம்
-
டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி
-
சோனியா சுயசரிதையில் 55 பிழைகள்!