போக்சோ வழக்கில் கைதானவர் மன உளைச்சலில் விபரீத முடிவு

குமாரபாளையம்:குமாரபாளையம் அருகே போக்சோ வழக்கில் கைதானவர், மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் கொசுவங்காடு பகுதியில் வசிப்பவர் சக்திவேல், 46. இவர் தேனி பகுதியில், போக்சோ வழக்கில் சில மாதங்களுக்கு முன்பு கைதானார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், உடல்நிலை சரியில்லாத நிலையிலும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement