காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்
-நமது நிருபர்-
ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பணியில் இருந்த பாபி சந்த் (57) மற்றும் ராஷ்பால் குமார் (45) ஆகிய இரண்டு போலீஸ் சிறப்பு அதிகாரிகள் மாயமாகினர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்தது. இன்று இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இருவரது உடல்களிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து பலத்த காயம் அடைந்துள்ளது; அவர்களின் துப்பாக்கிகள் மாயமாகி உள்ளன என போலீசார் தெரிவித்தனர். பயங்கரவாதிகள் இவர்களைக் கடத்திச் சென்று சுட்டுக் கொன்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
கிஷ்ட்வார் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்க வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
வாசகர் கருத்து (1)
BALAJI - Coimbatore,இந்தியா
12 நவ,2026 - 10:43 Report Abuse
பயங்கரவாதிகளை சுட்டு கொல்ல வேண்டும் அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது 0
0
Reply
மேலும்
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
கலெக்டருக்கு டார்ச்சர்; கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது டிஜிபியிடம் அதிமுக புகார்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.3520 குறைவு
-
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம்; திமுக பிரமுகர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கம்
-
தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்: நடவடிக்கை எடுக்க பாஜ வலியுறுத்தல்
Advertisement
Advertisement