தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 6 மாதங்களில், இதுவரையில் ரூ.148.91 கோடி மதிப்பிலான 163.40 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையில்; இணை ஆணையர் நீதிமன்றங்களில் 23,815 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, 9,125 வழக்குகளில் இறுதி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கோவில்களுக்கு சொந்தமான ரூ.148.91 கோடி மதிப்பிலான 163.40 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

கோவில்களுக்கு சொந்தமான அசையாச் சொத்துகளிலிருந்து வரப்பெற வேண்டிய கேட்பு-வசூல் நிலுவைத் தொகையில் ரூ.213 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. 34.82 ஏக்கர் நிலங்களுக்கு 15 கோவில்களின் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு பெறப்பட்டுள்ளது. கணினிச் சிட்டாவில் தவறுகள் திருத்தம் செய்யப்பட்டு 262 ஏக்கர் நிலங்கள் 226 கோவில்களின் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளன. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement