தேசிய ஜூனியர் தடகளப் போட்டி தமிழக அணி வெள்ளி பதக்கம்

மந்தாரக்குப்பம்: தேசிய ஜூனியர் தடகளப் போட்டியில் தமிழ்நாடு அணி இரண்டாமிடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் 41 வது தேசிய ஜூனியர் 16 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில், 1000 மீட்டர் தடகளப் போட்டி கடந்த 23 ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடந்தது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா, புதுடில்லி, அசாம், ஹரியானா, தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்ற கடலுார் மாவட்டத்தை சேர்ந்த என்.எல்.சி., விளையாட்டு பள்ளி மாணவர் சஞ்சய் உள்ளிட்டோர் திறமையை வெளிபடுத்தினர்.

அனைத்து போட்டி முடிவுகளில் ஹரியனா அணி முதலிடத்தை பிடித்து தங்கம் பதக்கம் வென்றது. தமிழக அணி இரண்டாமிடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றது. தெலுங்கானா அணி மூன்றாம் இடத்தை பிடித்தது.

போட்டியில் இரண்டாமிடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்ற என்.எல்.சி., விளையாட்டு பள்ளி மாணவர் சஞ்சயை என்.எல்.சி., பள்ளி கல்வி செயலர் பிரபாகரன், என்.எல்.சி., விளையாட்டு பள்ளி தாளாளர் நாராயணன், தலைமையாசிரியர் கோவிந்தம்மாள், உடற்கல்வி இயக்குநர் சத்தியராஜ், உடற்கல்வி ஆசிரியர் பாலாஜி, பயிற்சியாளர் ஜேம்ஸ், உட்பட பலர் பாராட்டினர்.

Advertisement