15 கூட்டுறவு அங்காடிகளில் ரூ.100க்கு 10 வகை காய்கறி

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 12 அங்காடிகள் மற்றும் மூன்று நடமாடும் கடைகளில், 100 ரூபாய்க்கு 10 வகை காய்கறிகள் அடங்கிய தொகுப்பு, இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கூட்டுறவு துறை சார்பில் நடத்தப்படும் 218 கூட்டுறவு அங்காடிகளில், தீபாவளியை முன்னிட்டு, 10 வகையான காய்கறிகள் அடங்கிய, ‘வெற்றி’ சிறப்பு காய்கறி தொகுப்பு, 100 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது.

இதில், தலா அரை கிலோ தக்காளி, வெங்காயம், 250 கிராம் கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, 200 கிராம் கேரட், பீன்ஸ், 100 கிராம் பச்சை மிளகாய், எலுமிச்சை, 50 கிராம் இஞ்சி, 400 கிராமில் ஒரு தேங்காய் என, 10 வகையான காய்கறிகள் வழங்கப்பட உள்ளன.

சென்னையில் உள்ள 12 அங்காடிகள் மற்றும் மூன்று நடமாடும் காய்கறி கடைகள் வாயிலாக, வரும் 7ம் தேதி வரை விற்கப்பட உள்ளது.

@block_B@

எந்தெந்த கடைகள்



இடம் | பொறுப்பாளரின் மொபைல்போன் எண்

டி.யு.சி.எஸ்., காமதேனு, எண் 273, அண்ணா சாலை | 98142 32835

டி.யு.சி.எஸ்., எண் 156, திருவல்லிக்கேணி | 81229 05033

டி.யு.சி.எஸ்., ஆர்.ஏ.புரம் | 86670 73970

டி.யு.சி.எஸ்., கீழ்ப்பாக்கம் | 90942 75125

டி.யு.சி.எஸ்., பெரியார் நகர் | 96000 54984

டி.யு.சி.எஸ்., நடமாடும் கடைகள், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நந்தனம் | 82485 52500

டி.யு.சி.எஸ்., எழும்பூர், சிந்தாரிப்பேட்டை, புதுப்பேட்டை | 78711 33441

பூங்கா நகர் பண்டகசாலை, அண்ணா நகர் | 86670 55754

பூங்கா நகர் பண்டகசாலை, ஷெனாய் நகர் | 99627 10537

பூங்கா நகர் பண்டகசாலை, அண்ணா நகர் | 98401 99914

பூங்கா நகர் பண்டகசாலை, பெரம்பூர் | 86082 78491

வட சென்னை பண்டகசாலை, இப்ராஹிம் சாலை | 86672 63543

அடையாறு கூட்டுறவு பண்டகசாலை, அடையாறு

வண்ணாரப்பேட்டை பண்டகசாலை, பெரியார் நகர்

வண்ணாரப்பேட்டை பண்டகசாலை, ராயபுரம்block_B

Advertisement