மத மோதலை துாண்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

-– நமது நிருபர் –: ஏர்வாடி தர்கா பகுதியில், மத மோதலை ஏற்படுத்தும் வகையில், சித்தர் வழிபாடை இழிவுப்படுத்தி, சமூக வலைதளத்தில் பதிவிட்ட இப்ராஹிம், 45, என்பவர் மீது, நடவடிக்கை எடுக்க கோரி, போலீஸ் ஸ்டேஷனில், ஹிந்து முன்னணி சார்பில், புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த நவ., 2ல் வாட்ஸாப்பில் வந்த புகைப்படம், ஆடியோ பதிவில், ஏர்வாடி தர்கா, நிலா நகர் கிராமம் பின்புறம், சித்தர் பெயருடன், சில அநாகரிக வார்த்தைகளை சேர்த்து, ஒருவர் சாமியார் வேடமிட்டு, அருள் வழங்குவதாக, விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

அந்த நபர் பெயர் இப்ராஹிம். அவர், சித்தர் வழிபாட்டையும், ஹிந்து மதத்தின் நம்பிக்கைகளையும், கடவுள்களையும் இழிவுப்படுத்தி, அதன் வாயிலாக இரு மதங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டுள்ளார்.

எனவே, ஹிந்து மதத்தினரின் நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் செயல்பட்ட இப்ராஹிம் மீது, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement