கபடி போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி ஆர்.கே.எஸ்., மாணவிகளுக்கு பாராட்டு
கள்ளக்குறிச்சி: கபடி போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் முடித்து இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவிகள் அண்ணாமலை பல்கலைக் கழக இணைவு பெற்ற கல்லுாரிகளுக்கு இடையே நடந்த கபடி போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கான பாராட்டு விழா நடந்தது. விழாவில் கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார்.
கேலோ இந்தியா கபடி பயிற்சியாளர் சிவக்குமார், கபடி பயிற்சியாளர் இம்ரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி துறை இயக்குனர் பாலாஜி வரவேற்றார். துணை முதல்வர் அசோக், அறிவியல் புல முதல்வர் சக்திவேல், கலை புல முதல்வர் லோரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து கபடி போட்டியில் வெற்றி கல்லுாரி மாணவிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். இதில் கல்லுாரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். உடற்கல்வி துறை இயக்குனர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.
மேலும்
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; பெயர் சேர்க்க டிச.,11 வரை அவகாசம்
-
டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி
-
சோனியா சுயசரிதையில் 55 பிழைகள்!
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்