பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம்
பெரிய மாரியம்மன் கோவிலில்,
ஆண்டுதோறும் ஐப்பசி மாதம்
தேர்த்திருவிழா விமர்சையாக நடப்பது வழக்கம்.
அதன்படி, கடந்த, 29ல்,
பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய
நிகழ்வான, இன்று அதிகாலை, 4:00 மணிக்கு அக்னி கரகம் எடுத்தல், காலை,
6:00 மணிக்கு பூமிதித்தல், அன்னதானம் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு,
முக்கிய வீதிகளின் வழியாக, பக்தர்களால் திருத்தேர் வடம் பிடித்து
இழுக்கப்படும்.நாளை மாலை, 3:00 மணிக்கு பூந்தேர் அழைத்தல், வண்டி
வேடிக்கை, காட்டுமிராண்டி வேடம், 600 கிலோ எடை உரல் இழுத்தல், அழகு
குத்துதல், பூங்கரகம், ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் சூரியநாராயண
மூர்த்தி காட்சியளித்தல், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட
ரதத்தில் அம்மன் பவனி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். 15 காலை,
9:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவடைகிறது.
மேலும்
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; பெயர் சேர்க்க டிச.,11 வரை அவகாசம்
-
டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி
-
சோனியா சுயசரிதையில் 55 பிழைகள்!
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
-
காஷ்மீரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகள் அட்டூழியம்