சவுதி அரேபியாவில் சிக்கி தவித்த இந்திய மாலுமிகள் 4 பேர்; தக்க நேரத்தில் உதவிகரம் நீட்டிய தூதரகம்

- நமது நிருபர் -




கப்பல் நிறுவனத்துடனான நிர்வாக ரீதியான தகராறு காரணமாக இந்திய மாலுமிகள் 4 பேர் சவுதி அரேபியாவில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தலையிட்டு, அவர்களின் பணியில் இருந்து விடுபடுவதற்கான சட்டப்பூர்வ நடைமுறைகளை வெற்றிகரமாக செய்துள்ளது.

ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட பதிவில், ''ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம், கப்பல் உரிமையாளருடனான மோதலால் சிக்கிக்கொண்ட நான்கு இந்திய மாலுமிகளுக்கு வெற்றிகரமாக உதவி வழங்கியுள்ளது.

பணியிலிருந்து விலகுவதற்கான நடைமுறைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் இந்தியாவுக்குத் திரும்பவுள்ளனர். இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இந்திய மாலுமிகள் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் இணைய வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறோம்'' என குறிப்பிட்டுள்ளது.

Advertisement