தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம்; திமுக பிரமுகர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கம்
சென்னை: தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏவும், தனியார் பள்ளிகள் சங்க மாநில பொருளாளருமான முத்துக்குமார் தலைமறைவாக இருந்து வந்தார். அக்.,28ம் தேதி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார்.
அவருக்கு நவம்பர் 12 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இன்றுடன் அவருடைய காவல் முடிவடைய இருக்கிறது. மகேஷ், அரசகுமார், முத்துக்குமாருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்போது, திமுக நிர்வாகியான முத்துக்குமாரின் 29 வங்கிக் கணக்குகளை முடக்கி, அதில் இருந்த ரூ.4.5 கோடியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மற்றொரு திமுக பிரமுகரான அரசகுமாரின் ரூ.4 லட்சம் இருந்த 20 வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் மகேஷின் வங்கிக் கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவருடைய வங்கிக் கணக்குகளும் முடக்கும் வாய்ப்பு உள்ளது.
திமுக மற்றும் ஊழல் இவை இரண்டும் இணை பிரியா சகோதரர்கள்.
DMK received party fund which is indirectly corrupt money.
இவ்வளவு இருக்கும்போது எப்படி PT அரசகுமார் க்கு ஜாமீன் கிடைத்தது அதுவும் 90 நாள் ஆகியும் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய வில்லை
வெளிநாட்டுல ஜிலேபி பாதாம் பால் தின்ன/ தின்கிற குதிரை சவாரி ஆட்களை விட்டுவிடுங்க.. அவங்க பாவம் பரம ஏழை பிழைக்க ரயிலில் காசில்லாமல் மெட்றாஸ் வந்தவங்க. ..இப்படியே கரையான் புத்து போல ஆட்டம் ஆடி அழுகுணி திருட்டு செஞ்சி தமிழ்நாட்டை மொட்டை போடட்டும்.
வங்கி கணக்குகள் முடங்குவது இருக்கட்டும், மொத்த திமுகவும் முடங்குவது தான் தமிழகத்திற்கு நன்மை செய்யும்
அப்படி முடக்க நினைத்தவர்களுக்கு எல்லாம் ... DMK க்கு பழக்கம் உங்க வசதி எப்படி
ஒரு திமுக பிரமுகருக்கு 29 வங்கி கணக்குகளா? சின்ன டவுட்டு, உள்நாட்டிலா அயல்நாட்டிலா
லஞ்சப் பணத்தை வங்கியில் போடுமளவுக்கு அவர்கள் புத்திசாலிகளல்ல.
உண்மையான கருத்து. திமுகவினரின் பணமெல்லாம் கிரீஸ் சைப்ரஸ் போன்ற அயல்நாடுகளில்தான் இருக்கும்.மேலும்
-
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை; குண்டுவெடிப்புகள், சாலை மறியல்கள், தீ வைப்பு சம்பவத்தால் பரபரப்பு
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; பெயர் சேர்க்க டிச.,11 வரை அவகாசம்
-
டி.கே.சிவகுமார் சொல்வது எதுவும் நடக்காது; கர்நாடகா முதல்வருக்கு அமைச்சர் ஆனந்த் பதிலடி
-
சோனியா சுயசரிதையில் 55 பிழைகள்!
-
தவெக ஆட்சியின் 6 மாதங்களில் ரூ.148.91 கோடி கோவில் நிலங்கள் மீட்பு; இந்து அறநிலையத்துறை
-
நியூயார்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி