கலெக்டருக்கு டார்ச்சர்; கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது டிஜிபியிடம் அதிமுக புகார்

சென்னை: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவாக இருப்பவர் அருள் விக்னேஷ். இவர் மது போதையில் மாவட்ட கலெக்டர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அவரது வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வருகிறார்.

தவெக எம்எல்ஏவுக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது உடனடியாக குற்றவயில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டிஜிபியிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகார் மனுவில்; ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதுடன், கலெக்டரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் அத்துமீறி நுழைந்துள்ளதாக அருள் விக்னேஷ் மீது புகார் உள்ளது. கலெக்டர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.

தலைமை செயலர், உள்துறை செயலர்களிடமும் அருள் விக்னேஷூக்கு எதிராக தனித்தனியாகவும் அதிமுக புகார் அளித்துள்ளது.

சிறப்பு வீடியோ!


கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது டிஜிபியிடம் அதிமுக புகார்; பின்னணி குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு


வீடியோ பார்க்க இங்கே ஒரு கிளிக்!

Advertisement