வி.சி., நிர்வாக குழு கூட்டம்
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டசபை தொகுதி, வி.சி., கட்சியின் நிர்வாக குழு கூட்டம், அரூரில் நடந்தது. அரூர் தொகுதி மாவட்ட செயலாளர் சாக்கன்சர்மா தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் திருலோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வரும், 27ம் தேதி வி.சி., தலைவர் திருமாவளவன் பங்கேற்கும் பொதுக்கூட்டம் தர்மபுரியில் நடக்கிறது.
அதில், அரூர் தொகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்ள வேண்டும். அரூர் தொகுதியில், 'வெற்றி வீடு' வழங்கும் திட்டத்தில் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, தகுதியான பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் மூவேந்தன், சாந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement