ஜி.ஹெச்.,ல் செவிலியர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவமனையில், ஒப்பந்த அடிப்படையில் செவிலியராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம் என, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மாவட்டத்தில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில், ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணிடங்களில் பணிபுரிய, தர்மபுரி மாவட்ட நலச்சங்கத்தின் மூலம், 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் டிச., 4ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், தர்மபுரி மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். கல்வித்தகுதி மற்றும் பிற விபரங்களை மாவட்ட வலைதளத்தில், www.dharmapuri.nic.in என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.