வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில், நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நடந்தது.
இதில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி, இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத தகுதியுடைய நபர்கள் மற்றும், 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள படிவம் - 6 மூலம் விண்ணப்பித்தனர். அதேபோல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்யவும் விண்ணப்பித்தனர். அரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, 322 ஓட்டுச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடந்தது. இம்முகாம், இன்றும், நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement