அரூரிலிருந்து தி.மலைக்கு 118 போலீசார் பயணம்
அரூர்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா கடந்த, 15ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம், வரும், 24ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, தீபத்திருவிழா பாதுகாப்பு பணிக்காக, தர்மபுரி மாவட்டம், அரூர் சப்டிவிஷனில் இருந்து, 118 போலீசார் திருவண்ணாமலைக்கு புறப்பட்டுச் சென்றனர். தீபத்திருவிழா முடிந்த பின், அவர்கள், 26ம் தேதி அரூருக்கு திரும்பி வர உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement