சேர்த்தீர்களா! வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை... இன்றும், 29ம் தேதியும் நடக்கிறது முகாம்
கோவை:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் நேற்று துவங்கியது. மாவட்டத்தில் உள்ள 1,067 ஓட்டுச்சாவடி மையங்களில் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை முகாம்கள் நடக்கின்றன.
கடந்த ஏப்., 6ல் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 27,44,472 வாக்காளர்கள் இருந்தனர். 2027 ஜன., 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 37,343 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். 12,995 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நேற்று துவங்கியது. இன்று மற்றும் வரும் 29ம் தேதியிலும் முகாம் நடக்கிறது.புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6, வெளிநாடு வாழ் வாக்காளர்கள் பெயர் சேர்க்க படிவம் 6ஏ, ஆதார் எண் இணைக்க படிவம் 6பி, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்கள் செய்ய படிவம் 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து வழங்கலாம்.
அதிகாரிகள் கூறுகையில், 'கோவை வடக்கு, தெற்கு, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 10 சட்டசபை தொகுதிகளில் நேற்று நடந்த முகாம்களில் 3,000 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். முகாமில் பங்கேற்க முடியாதவர்கள் voters.eci.gov.in இணையதளம் மற்றும் இசிஐநெட் (ECINET) செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்' என்றனர்.
மேலும்
-
ஆண்டு 55 மேடை 3000 தலைமுறை 3
-
'குடு குடு' வயசு... 'கொடு கொடு' மனசு: இணையத்தில் இணைந்த 'இதய' கமலங்கள்
-
திருப்புத்துார்,எஸ்.புதுாரில் போலீஸ் பற்றாக்குறை போக்குவரத்து நெருக்கடி தொடர்கிறது
-
சாலையோரம் மண் குவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
-
திறந்து கிடக்கும் சாக்கடை விபத்து ஏற்படும் அபாயம்
-
கட்டி முடித்தும் பயன்பாட்டிற்கு வராத அரசு கட்டடங்கள்