திருப்புத்துார்,எஸ்.புதுாரில் போலீஸ் பற்றாக்குறை போக்குவரத்து நெருக்கடி தொடர்கிறது
திருப்புத்துார்: திருப்புத்துார் நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க போக்குவரத்து போலீசாரை முழுமையாக நியமிக்கவும், வளர்ச்சிகேற்ப பணியிடங்களை அதிகரிக்கவும் பொதுமக்கள் கோரியுள்ளனர்.
திருப்புத்துார் வளர்ந்து வரும் போக்குவரத்து நகராகும். வட மாவட்டங்களையும், தென் மாவட்டங்களையும் இணைக்கும் இப்பகுதியில் தற்போது தேசிய நெடுஞ்சாலை அதிகரித்துள்ளன. திருப்புத்துாரைச் சுற்றிலும் ஆன்மிகத் தலங்கள் உள்ளதால் வாகனப்போக்குவரத்து இப்பகுதியில் அதிகரித்துள்ளன. ஆனால் போக்குவரத்தைக் கண்காணிக்க போதிய போலீசார் நியமிக்கப்படாததால் கண்காணிப்பு தொய்வடைந்துள்ளது.
திருப்புத்துாரில் 1984 ல் போக்குவரத்து காவல் நிலையம் ஒரு எஸ்.ஐ.,4 போலீசாருடன் துவக்கப்பட்டது. தற்போது நகரில் மக்கள் தொகை அதிகரித்தும், சாலை வசதி, வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தும் இந்த எண்ணிக்கை மாறவில்லை. மேலும், இந்த எண்ணிக்கையிலும் போலீசார் பணியாற்றவில்லை என்பது தான் உண்மை. கடந்த ஒரு ஆண்டாக இங்கு போக்குவரத்து எஸ்.,ஐ.,பணியிடம் நிரப்பப்படவில்லை. 3 காவலர் மட்டுமே உள்ளனர். அதில் விடுமுறை, அயலகப்பணி என்று சென்று விட்டால், நகரில் ஒருவர் போக்குவரத்து பணியில் இருந்தாலே பெரிய விஷயம் என்ற நிலை தான் உள்ளது.
நகரில் நான்கு ரோடு, பஸ் ஸ்டாண்ட் அருகில், மதுரை ரோடு சந்திப்பு, அண்ணாத்துரை சிலை, சிங்கம்புணரி முக்கு என்று நான்கு சந்திப்புக்கள், நகருக்கு வெளியே தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை சந்திப்புக்கள் என்று போக்குவரத்து சந்திப்பு அதிகரித்துள்ளன. இதனால் போக்குவரத்து எஸ்.ஐ.,மற்றும் கூடுதல் காவலர் நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிங்கம்புணரிஊ
எஸ்.புதூர் அருகேயுள்ள உலகம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ., மற்றும் 17 போலீசார் பணியிடம் உள்ள நிலையில் 10 போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர். இன்ஸ்பெக்டரும், எஸ்.ஐ., யும் பணி மாறுதல் பெற்று சென்று விட்ட நிலையில் அந்தப் இடங்களுக்கு இன்னும் யாரும் வரவில்லை. 17 போலீசார் இருக்க வேண்டிய நிலையில் 10 போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர் அதிலும் ஐந்து பேர் அயல் பணிக்கு சென்று விடும் நிலையில் 5 முதல் 6 போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர்.
இதனால் கிராமப் பகுதிகளுக்கு இரவு நேரங்களில் ரோந்து பணிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. ஏற்கனவே, போலீசார் தனியாக ரோந்து செல்லக்கூடாது ஒன்றுக்கு மேற்பட்டோர் தான் செல்ல வேண்டும் என்று உத்தரவு உள்ளது. ஆனால் இப்பகுதியில் ஒரு போலீசார் மட்டுமே ரோந்துப் பணிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் உலகம்பட்டி பகுதியில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அங்கு பூட்டியிருந்த வீட்டில் 50 பவுனுக்கும் மேற்பட்ட நகை, வெள்ளி பொருட்கள் திருடு போனது. விவசாயி தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் ஒன்றும் காணாமல் போனது. மேலும் இப்பகுதியில் மின்மோட்டார், மின் வயர்களும் அடிக்கடி திருடு போவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். குற்றச்சம்பங்களுக்கு புகார் கொடுக்கச் செல்லும் பட்சத்தில் போலீசார் பற்றாக்குறை காரணமாக விசாரணையும் தாமதமாகிறது. மலைக்கிராமப் பகுதி மற்றும் மாவட்ட எல்லைப் பகுதி என்பதால் இங்கு கூடுதல் போலீசார் பணியமர்த்த வேண்டும்.
மேலும்
-
'குடு குடு' வயசு... 'கொடு கொடு' மனசு: இணையத்தில் இணைந்த 'இதய' கமலங்கள்
-
சாலையோரம் மண் குவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
-
திறந்து கிடக்கும் சாக்கடை விபத்து ஏற்படும் அபாயம்
-
கட்டி முடித்தும் பயன்பாட்டிற்கு வராத அரசு கட்டடங்கள்
-
திருவண்ணாமலை தீபத்திருவிழா தரிசனத்தில் முதல்முறை; 3 ஆயிரம் பக்தர்களுக்கு இணைய வழி பாஸ்
-
நாகர்கோவிலில் ரயில் பெட்டிக்குள் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை