சாலையோரம் மண் குவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருப்புவனம்: திருப்புவனத்தில் சாலையோர மண் குவியலால் தினசரி இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.
திருப்புவனத்தைச் சுற்றிலும் ஏராளமான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர ஜல்லி, எம்சாண்ட், பி சாண்ட் விற்பனை செய்யும் தனியார் கடைகளும் உள்ளன. வாகனங்களில் இந்த பொருட்களை கொண்டு செல்லும் போது அதிலிருந்து மணல் துகள் பறந்து சாலையோரம் குவிந்துள்ளது. இவற்றை பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அடிக்கடி அகற்றுவது வழக்கம்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மண் குவியல் அகற்றப்படாததால் தினசரி சைக்கிள், டூவீலர்களில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சாலையோர மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திறந்து கிடக்கும் சாக்கடை விபத்து ஏற்படும் அபாயம்
-
கட்டி முடித்தும் பயன்பாட்டிற்கு வராத அரசு கட்டடங்கள்
-
திருவண்ணாமலை தீபத்திருவிழா தரிசனத்தில் முதல்முறை; 3 ஆயிரம் பக்தர்களுக்கு இணைய வழி பாஸ்
-
நாகர்கோவிலில் ரயில் பெட்டிக்குள் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
-
கூட்டணி ஆட்சி அமைக்க வாருங்கள்; இஸ்ரேல் தேர்தலில் தோற்ற நெதன்யாகு கட்சிக்கு எதிர்க்கட்சி அழைப்பு
-
விவசாயிகள் துயர் துடைக்க உடனே நிவாரணம் அறிவியுங்கள்: உதயநிதி வலியுறுத்தல்
Advertisement
Advertisement