தகவல் அறியும் உரிமை சட்டம் இணையவழி கலந்துரையாடல்

ராசிபுரம்:பொதுமக்கள், அரசின் திட்டங்கள் மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்த விபரங்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், தகவல் அறியும் உரிமை சட்டம் நடைமுறையில் உள்ளது.

இச்சட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, பத்து ரூபாய் இயக்கம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, 'மக்களின் கையில் உள்ள பேராயுதம் -தகவல் அறியும் உரிமை சட்டம்' என்ற தலைப்பில் இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சி, நேற்று இரவு நடந்தது.
இதில், தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்கள், அதற்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும், உள்ளாட்சி அமைப்புகளில், 'கிராம சபை' செயல்பாடுகள் பற்றிய ஒரு பார்வை என்ற தலைப்பிலும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஏற்பாடுகளை, பத்து ரூபாய் இயக்கத்தின், திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.

Advertisement