குடிநீர் மேம்பாட்டு பணி கருத்து கேட்பு கூட்டம்
திருச்செங்கோடு:திருச்செங்கோடு
நகராட்சியில், குடிநீர் மேம்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை மற்றும்
கருத்து கேட்பு கூட்டம், நகர்மன்ற கூட்ட அரங்கில், நகராட்சி சேர்மன்
நளினி சுரேஷ்பாபு தலைமையில்
நடந்தது.
நகராட்சி கமிஷனர் குமரன்,
செயற்பொறியாளர் மலர்விழி, உதவி பொறியாளர் சத்திய நாகராணி ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், நகராட்சி சேர்மன் நளினி
சுரேஷ்பாபு பேசுகையில், ''திருச்செங்கோடு நகராட்சிக்கு, 36 கி.மீ.,
தொலைவில் புள்ளாகவுண்டம்பட்டி மற்றும் 10 கி.மீ., தொலைவில் உள்ள
ஆவத்திப்பாளையம் தலைமை நீரேற்று நிலையம் மூலம் குடிநீர் வினியோகம்
செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு தொடர்ந்து குடிநீர்
தடைபடாமல் சீரான முறையில் வினியோகம் செய்ய, 152.97 கோடி ரூபாய்
மதிப்பீட்டில், விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்த கருத்துகளை, கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள்
ஆகியோரிடம் கேட்டு அரசுக்கு முழுமையான திட்ட அறிக்கை அனுப்பப்பட
உள்ளது,'' என்றார்.
நகராட்சி கமிஷனர் குமரன் பேசுகையில்,
''ஏற்கனவே இருக்கும் பழைய பி.வி.சி., பைப் லைன்கள் முழுமையாக ஏறத்தாழ,
220 கி.மீ., துாரத்திற்கு நகர பகுதி முழுவதும் உள்ள குழாய்கள்
அகற்றப்பட்டு, புதிய குழாய்கள் பதிக்கப்படும். தினமும் குடிநீர்
அனைத்து பகுதிகளுக்கும் வழங்கும் வகையில் திட்டம் தயார் செய்யபட
உள்ளது,'' என்றார்.
மேலும்
-
ஆண்டு 55 மேடை 3000 தலைமுறை 3
-
'குடு குடு' வயசு... 'கொடு கொடு' மனசு: இணையத்தில் இணைந்த 'இதய' கமலங்கள்
-
திருப்புத்துார்,எஸ்.புதுாரில் போலீஸ் பற்றாக்குறை போக்குவரத்து நெருக்கடி தொடர்கிறது
-
சாலையோரம் மண் குவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
-
திறந்து கிடக்கும் சாக்கடை விபத்து ஏற்படும் அபாயம்
-
கட்டி முடித்தும் பயன்பாட்டிற்கு வராத அரசு கட்டடங்கள்