மொபைல்போன் கடையில் கைவரிசை காட்டியவர் கைது

சென்னிமலை:சென்னிமலை யூனியன் ஈங்கூர் ஊராட்சி, எல்லைமேட்டில், ஒரு மொபைல்போன் கடை உள்ளது. கடந்த, 18ம் தேதி இரவு கடையில் திருட்டு போனது. சென்னிமலை போலீசார் 'சிசிடிவி' கேமரா பதிவுகளின் அடிப்படையில் குற்றவாளியை தேடி வந்தனர்.

இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில், சென்னிமலையில் லட்சுமி நகரில் தங்கியிருந்த, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த முகமது துஹின் மொல்லா, 19, என்பவரை பிடித்து விசாரித்தனர். கட்டட தொழிலாளியான அவர், திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து இரு மொபைல்போன், 6,500 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

Advertisement