சிப்காட் ஆலையில் காப்பர் கம்பி திருடிய இருவர் கைது

சென்னிமலை:சென்னிமலை யூனியன் ஈங்கூரில் உள்ள சிப்காட் வளாகத்தில், ஒரு ஸ்டீல் நிறுவனத்தில், கடந்த மாதம் காப்பர் கம்பி திருட்டு போனது.

புகாரின்படி சென்னிமலை போலீசார் தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். கோவை மதுக்கரை மரப்பாலம் பகுதியை சேர்ந்த செல்வகுமார், 45, சாகின், 27, ஆகியோரை, மதுக்கரையில் போலீசார் நேற்று பிடித்தனர்.
இருவரையும் சென்னிமலை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதில் நான்கு லட்சம் மதிப்பிலான திருட்டு போன பொருட்களை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து, பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Advertisement