வெறிநாய் கடித்ததில் 15க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை
குளித்தலை:குளித்தலை அடுத்த கடவூர் யூனியன் தரகம்பட்டி பகுதியில், நேற்று காலை பைக்கில் சென்றவர்கள், நடந்து சென்றவர்கள், கடையில் பொருள்களை வாங்க வந்தவர்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டவர்களை, சுற்றித்திரிந்த வெறிநாய்கள் கடித்துள்ளன.
பாதிக்கப்பட்டவர்கள் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து, கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதி, வீ த லீடர்ஸ் தன்னார்வலர் பொறியாளர் நவீன்குமார் கூறியதாவது:
தரகம்பட்டி பஞ்., பகுதியில் நேற்று காலை, 15க்கும் மேற்பட்ட தொழிலாளர், விவசாயிகளை வெறிநாய்கள் கடித்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள், மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெறி நாய்களால் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மக்கள் நலன் கருதி, சுற்றித்திரியும் வெறி நாய்களை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.
மேலும்
-
விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் கவுண்டர்களில் முன்பதிவில்லா டிக்கெட்டுகள் வழங்குவது அவசியம்: பயணிகள் எதிர்பார்ப்பு
-
கோலாட்ட ஊர்வலம்
-
வெற்றி மகளிர் இல்ல தோட்டத்திற்கு மானியம்: தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் தகவல்
-
மலையாளம் மிஷன் படிப்பு தேர்வு: மாவட்ட அளவில் 54 பேர் பங்கேற்பு
-
வேளச்சேரி சான் அகாடமி அணி மாநில வாலிபாலில் ‘சாம்பியன்’
-
ஓசூரம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை