மலையாளம் மிஷன் படிப்பு தேர்வு: மாவட்ட அளவில் 54 பேர் பங்கேற்பு
குன்னூர்: அருவங்காட்டில் மலையாளம் மிஷன் படிப்பு தேர்வு வழக்கமான முறைகளிலிருந்து மாறுபட்டு திருவிழா சூழலில் நடத்தியதில், 54 மாணவர்கள் தேர்வெழுதினர்.
திருவனந்தபுரத்தில் உள்ள மலையாளம் மிஷன் மையத்தின் வழிகாட்டுதல்களின்படி, தமிழகம் முழுவதும் சென்னை, கல்பாக்கம், திருச்சி, ஈரோடு, கோவை, ஓசூர், கன்னியாகுமரி மற்றும் நீலகிரி ஆகிய, 8 மையங்களில் இன்று (நவ.,22) மலையாள மொழி தேர்வு நடந்தது.
நீலகிரி மாவட்டத்திற்கான தேர்வு மையமான அருவங்காடு கார்டைட் பேக்டரி மேல்நிலை பள்ளியில்
தேர்வுக்கு முன்பு மலையாளம் மிஷன் சார்பில் படிப்பு திருவிழா நடந்தது, கைரளி தலைவர் நவீன் ஜேம்ஸ் துவக்கி வைத்தார். கேரள அரசின் அதிகாரப்பூர்வ மொழி தேர்வான மலையாள தேர்வை நீலகிரி மாவட்ட அளவில், 54 பேர் எழுதினர்.
மாநிலம் முழுவதும் மொத்தம், 650 மாணவர்கள் தேர்வெழுதி உள்ளனர். 450 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்; மீதமுள்ள மாணவர்கள் அருவங்காடு உள்ளிட்ட பிற மையங்களில் தேர்வெழுதினர். இரண்டு ஆண்டுகால மொழி படிப்பை மதிப்பீடு செய்யும் கணிக்கொன்னா, சூரியகாந்தி, ஆம்பல் ஆகிய சான்றிதழ் படிப்புகளுக்கான இத்தேர்வு, வழக்கமான முறைகளிலிருந்து மாறுபட்டு கவிதை, கதை, கலந்துரையாடல் மற்றும் பாடல்களுடன் திருவிழா சூழலில் நடத்தப்பட்டது.
தமிழகத்தில், 100 ஆசிரியர்கள் தேர்வுப் பணிகளை மேற்கொண்டு, மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைத்தனர்.
மேலும்
-
சமூக நல உறுப்பினர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு
-
தேவிபட்டினம் நவபாஷாண கடல் சீற்றம்: புனித நீராட பக்தர்களுக்கு தடை
-
சேதமடைந்த நிலையில் துத்திநத்தம் சாலை
-
23 ஆண்டு கால பழைய ஓய்வூதிய திட்ட ஆசிரியர்களுக்கு திடீர் சிக்கல்: சி.பி.எஸ்.,க்கு மாற நெருக்கடி
-
மின் அமைப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம்
-
ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளால் கண்மாய்க்கு நீர் செல்வதில் சிரமம்