விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் கவுண்டர்களில் முன்பதிவில்லா டிக்கெட்டுகள் வழங்குவது அவசியம்: பயணிகள் எதிர்பார்ப்பு
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு இல்லா டிக்கெட்கள் இ.வி., மிஷின்கள், ரயில் ஓன் செயலியில் மட்டுமே வழங்கப்படுகிறது. பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் போதும் கூட கவுண்டர்களில் வழங்கப்படுவதில்லை. இதனால் முன்பதிவு இல்லா டிக்கெட்கள் எடுக்க முடியாமல் பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.
விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கவுண்டர்களில் தற்போது முன்பதிவு டிக்கெட் புக்கிங், தட்கல் டிக்கெட் புக்கிங் மட்டுமே செய்யப்படுகிறது.
முன்பதிவு இல்லா டிக்கெட்கள் கவுண்டர்களுக்கு அருகே உள்ள இ.வி., மிஷின்களில் வழங்கப்படுகிறது. மேலும் ரயில் ஓன் செயலியிலும் டிக்கெட் எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
ஆனால் 24 மணி நேரமும் முன்பதிவு டிக்கெட்கள், தட்கல் டிக்கெட்கள் கவுண்டர்களில் புக்கிங் செய்யப்படுவதில்லை. இப்படி டிக்கெட்கள் முன்பதிவு செய்யாமல் இருக்கும் போதும் கூட கவுண்டர்களில் பணியாளர்கள் பயணிகளிடம் இ.வி., மிஷின், ரயில் ஓன் செயலியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்குகின்றனர்.
பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது கூட கவுண்டர்களில் முன்பதிவு இல்லா டிக்கெட்கள் கொடுக்கப்படுவதில்லை. இதனால் பயணிகள் தினமும் பாதிக்கப்படுகின்றனர்.
இ.வி., மிஷின்களுக்கும், ரயில் ஓன் செயலிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை பயணிகளுக்கு கொடுக்காமல் இருப்பதால் பரிதவித்து வருகின்றனர்.
எனவே ரயில்வே ஸ்டேஷனின் கவுண்டர்களிலும் முன்பதிவு இல்லா டிக்கெட்கள் வழங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும்
-
சமூக நல உறுப்பினர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு
-
தேவிபட்டினம் நவபாஷாண கடல் சீற்றம்: புனித நீராட பக்தர்களுக்கு தடை
-
சேதமடைந்த நிலையில் துத்திநத்தம் சாலை
-
23 ஆண்டு கால பழைய ஓய்வூதிய திட்ட ஆசிரியர்களுக்கு திடீர் சிக்கல்: சி.பி.எஸ்.,க்கு மாற நெருக்கடி
-
மின் அமைப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம்
-
ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளால் கண்மாய்க்கு நீர் செல்வதில் சிரமம்