வெற்றி மகளிர் இல்ல தோட்டத்திற்கு மானியம்: தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் தகவல்
விக்கிரவாண்டி: வெற்றி மகளிர் இல்ல தோட்டம் அமைக்கும் திட்டத்தில் வீட்டிலேயே இயற்கை முறையில் காய்கறிகள் உற்பத்தி செய்ய அரசு மானியம் வழங்குகிறது.
விக்கிரவாண்டி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் ஜெய்சன் செய்திக்குறிப்பு:
விக்கிரவாண்டி தாலுகா பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே இயற்கை முறையில் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்யலாம். இதற்காக தமிழ்நாடு அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் வெற்றி மகளிர் இல்ல தோட்டம் அமைத்தல் திட்டம் செயல்படுத்தி வருகிறது.
இதற்காக காய்கறி விதைத் தொகுப்பு, பழச்செடி தொகுப்பு மற்றும் மாடித்தோட்டத் தொகுப்பு ஆகியவை அரசு மானியத்துடன் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை வகைகள் உள்ளிட்ட 6 வகையான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு 60 ரூபாய். இதில் 45 ரூபாய் அரசு மானியமாகவும், பயனாளியின் பங்களிப்புத் தொகையாக 15 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
மா, பலா கொய்யா எலுமிச்சை மற்றும் நெல்லி ஆகியவற்றில் ஏதாவது மூன்று வகையான செடிகள் அடங்கிய 100 ரூபாய் உள்ள தொகுப்புக்கு 75 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
வீட்டின் மாடிகளில் மாடித்தோட்டம் அமைத்து காய்கறிகளை உற்பத்தி செய்வதற்கு வசதியாக செடி வளர்ப்புப் பைகள், தென்னை நார் கழிவுகள், பல்வேறு வகையான காய்கறி விதைகள் மற்றும் உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்களை வாங்குவதற்காக 1,450 ரூபாய் மதிப்பிலான மாடித்தோட்டத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதில் 725 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
ஆர்வமுள்ள பயனாளிகள் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnhorticulture.tn.gov.in/kit/public/officer/login மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது விக்கிரவாண்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி கூடுதல் விவரங்களைப் பெற்றுப் பயன்பெறலாம் .
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
சமூக நல உறுப்பினர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு
-
தேவிபட்டினம் நவபாஷாண கடல் சீற்றம்: புனித நீராட பக்தர்களுக்கு தடை
-
சேதமடைந்த நிலையில் துத்திநத்தம் சாலை
-
23 ஆண்டு கால பழைய ஓய்வூதிய திட்ட ஆசிரியர்களுக்கு திடீர் சிக்கல்: சி.பி.எஸ்.,க்கு மாற நெருக்கடி
-
மின் அமைப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம்
-
ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளால் கண்மாய்க்கு நீர் செல்வதில் சிரமம்