வேளச்சேரி சான் அகாடமி அணி மாநில வாலிபாலில் ‘சாம்பியன்’
சென்னை: பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான ஜூனியர் வாலிபால் போட்டியில், மாணவியரில் வேளச்சேரி சான் அகாடமி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
அண்ணா நகர் லயன்ஸ் கிளப் மற்றும் சாந்தோம் பள்ளி இணைந்து, மாநில அளவிலான ஜூனியர் வாலிபால் போட்டியை, சாந்தோம் பள்ளி வளாகத்தில் இன்று (நவ.,22) நடத்தியது.
பள்ளிகளுக்கு இடையே. 14 வயதுக்கு உட்பட்டோருக்கான இப்போட்டியில், மாணவரில் 24 அணிகளும், மாணவியரில் 20 அணிகளும் பங்கேற்றுள்ளன.
மாணவியருக்கான முதல் அரையிறுதியில், முகப்பேர் வேலம்மாள் பள்ளி, 25 – 15, 25 – 17 என்ற புள்ளிக்கணக்கில், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில், வேளச்சேரி சான் அகாடமி அணி, 25 – 23, 24 – 23 என்ற புள்ளிக்கணக்கில் எஸ்.எஸ்.கே., அணியை தோற்கடித்தது.
விறுவிறுப்பான இறுதி போட்டியில், சான் அகாடமி அணி, 25 – 9, 25 – 12 என்ற புள்ளிக்கணக்கில், முகப்பேர் வேலம்மாள் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
மேலும்
-
சமூக நல உறுப்பினர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு
-
தேவிபட்டினம் நவபாஷாண கடல் சீற்றம்: புனித நீராட பக்தர்களுக்கு தடை
-
சேதமடைந்த நிலையில் துத்திநத்தம் சாலை
-
23 ஆண்டு கால பழைய ஓய்வூதிய திட்ட ஆசிரியர்களுக்கு திடீர் சிக்கல்: சி.பி.எஸ்.,க்கு மாற நெருக்கடி
-
மின் அமைப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம்
-
ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகளால் கண்மாய்க்கு நீர் செல்வதில் சிரமம்