ஆற்று மணல் பதுக்கிய வாலிபர் மீது வழக்கு

கரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, ஆற்று மணலை பதுக்கி வைத்திருந்ததாக, வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வேலாயுதம்பாளையம் அருகே மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் ராகுல், 35; இவர், வேலாயுதம்பாளையம் காட்டுப்பகுதியில், ஆற்று மணலை குவித்து வைத்திருப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அரவக்குறிச்சி டி.எஸ்.பி., பானு, வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆய்வாளர் மதன் ஆகியோர், சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, 15 யூனிட் ஆற்று மணல் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆய்வாளர் மதன் அளித்த புகார்படி, மகேஷ் ராகுல் மீது வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும், 15 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement