மழைநீர் சேகரிப்பதற்கான விழிப்புணர்வு உறுதிமொழி
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சியில், மழைநீர் சேகரிப்பதற்கான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அரவக்குறிச்சி
சிறப்பு நிலை பேரூராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு, வணிக
நிறுவனங்கள், அலுவலக கட்டடங்கள் மற்றும் திருமண மண்டபங்களில்,
மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க பேரூராட்சி தலைவர் ஜெயந்தி,
துணைத்தலைவர் தங்கராஜ் மற்றும் உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும்
துாய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
இயற்கையின்
கொடையான நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மழைநீரை வீணாக்காமல்
சேமிப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன். எனது வீட்டிலும்,
பணியிடத்திலும், பொது இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை
ஏற்படுத்தி, அவற்றை முறையாக பராமரிப்பேன். வானிலிருந்து விழும்
ஒவ்வொரு துளி மழைநீரையும் பூமிக்குள் செலுத்தி, நிலத்தடி
நீர்மட்டத்தை உயர்த்த பாடுபடுவேன்.
நீர்நிலைகளை
மாசுபடுத்தாமல் பாதுகாப்பதுடன், குளங்கள் மற்றும் ஏரிகளை துார்வாரி
நீர் தேங்கும் திறனை அதிகரிக்க முழு ஒத்துழைப்பு அளிப்பேன்.
தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்தி, என் குடும்பத்தினர், நண்பர்கள்
மற்றும் பக்கத்து வீட்டாரிடமும் மழைநீர் சேகரிப்பு குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். வளமான எதிர்காலத்திற்காகவும்,
வருங்கால தலைமுறையினருக்காகவும் நீர்வளத்தை பாதுகாப்பதே எனது
தலையாய கடமை என ஏற்கிறேன் என, விழிப்புணர்வு உறுதி மொழியை அனைவரும்
ஏற்றனர்.
மேலும்
-
விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் கவுண்டர்களில் முன்பதிவில்லா டிக்கெட்டுகள் வழங்குவது அவசியம்: பயணிகள் எதிர்பார்ப்பு
-
கோலாட்ட ஊர்வலம்
-
வெற்றி மகளிர் இல்ல தோட்டத்திற்கு மானியம்: தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் தகவல்
-
மலையாளம் மிஷன் படிப்பு தேர்வு: மாவட்ட அளவில் 54 பேர் பங்கேற்பு
-
வேளச்சேரி சான் அகாடமி அணி மாநில வாலிபாலில் ‘சாம்பியன்’
-
ஓசூரம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை