க.பரமத்தியில் பாலசுப்பிரமணிய சுவாமிகளின் குருபூஜை விழா

கரூர்:கரூர் சித்தர் ஆன்மிக சிவ ராஜயோக வள்ளல் பாலசுப்பிரமணிய சுவாமிகளின், 14வது குரு பூஜை விழா, க.பரமத்தி அருகே குமார கவுண்டன்புதுாரில் நடந்தது.

அதில் நேற்று காலை, 8:15 மணி முதல், 11:00 மணி வரை சிறப்பு ேஹாமம் மற்றும் அபிேஷகம், மதியம், 2.00 மணி வரை குரு பூஜை, மகேஸ்வர பூஜை நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில், 100க்கும் மேற்பட்ட சித்தர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். பிறகு, கரூரில் நான்கு மாட வீதிகளில் சித்தரின் திருமேனி திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை, பாலசுப்பிரமணிய சுவாமிகளின், மெய் அன்பர்கள் செய்திருந்தனர்.

Advertisement