காய்கறி நாற்று விற்பனை விவசாயிகள் மும்முரம்

கிருஷ்ணராயபுரம்,:சந்தையூர் வாரச்சந்தையில் காய்கறி நாற்று விற்பனை நடந்தது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சாயத்து, இரும்பூதிப்பட்டி சந்தையூர் வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் கூடுகிறது. நேற்று காய்கறி நாற்று விற்பனை மும்முரமாக நடந்தது.
தற்போது காய்கறி சீசன் துவக்கம் காரணமாக, இரும்பூதிப்பட்டி சாலை அருகேயுள்ள இடங்களில் சிறு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறி நாற்றுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
கத்திரிக்காய் நாற்று கட்டு ஒன்று, 50 ரூபாய், தக்காளி நாற்று, 40 ரூபாய், மிளகாய் நாற்று, 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. குறைந்த பரப்பளவில், விவசாய நிலங்களில் காய்கறி சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள், மலிவான விலையில் விற்கப்பட்ட காய்கறி நாற்றுகளை வாங்கி சென்று நடவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement