தந்தையிடம் துப்பாக்கி… அவசர உதவி எண்ணுக்கு வந்த திகிலூட்டும் அழைப்பு; அமெரிக்காவில் 4 பேர் சடலமாக மீட்பு
வாஷிங்டன்: அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள வெஸ்ட் லாபாயெட் நகரில், 4 பேர் கொண்ட ஒரே குடும்பம் தங்களது வீட்டிற்குள் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாக மீட்கப்பட்டனர். பர்டூ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜூலி டிகாச், 53, அவரது கணவரும் டிப்பிகானோ கவுண்டி ஷெரிப் அலுவலக ஊழியருமான தாமஸ் டிகாச், 51, மற்றும் அவர்களது மகள்கள் கேத்தரின், 17, லாரன், 16, ஆகியோர் என அடையாளம் காணப்பட்டனர்.
மகள்களில் ஒருவர் அவசர உதவி மையத்திற்கு 911 என்ற எண்ணிற்கு அழைத்து தனது தந்தையிடம் துப்பாக்கி இருக்கிறது. அவர் தங்களது குடும்பத்தினரை சுட்டுவிடுவேன் என மிரட்டுவதாக பேசிய திகிலூட்டும் சம்பவத்தைத் தொடர்ந்து இது நிகழ்ந்தது. அழைப்பின் போதே துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்ட நிலையில், போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது நால்வரும் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தனர்.
உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாமஸ் டிகாச் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களையும் சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
50 வயதிற்குமேல் எலும்பை வலுப்படுத்தும் உணவுகள்
-
தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதி; எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல்
-
ஆண்டு 55 மேடை 3000 தலைமுறை 3
-
'குடு குடு' வயசு... 'கொடு கொடு' மனசு: இணையத்தில் இணைந்த 'இதய' கமலங்கள்
-
திருப்புத்துார்,எஸ்.புதுாரில் போலீஸ் பற்றாக்குறை போக்குவரத்து நெருக்கடி தொடர்கிறது
-
சாலையோரம் மண் குவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்