தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதி; எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல்

- நமது நிருபர்-

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் வரும் நவம்பர் 24ல் திருக்கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்ற அனுமதி அளித்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஹிந்து அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.

இந்தநிலையில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது ஹிந்து அமைப்புகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இவ்விஷயத்தில் திமுக போலவே தவெகவும் செயல்படுகிறது என ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கமென்ட்டில் எழுதுங்கள்!

தீபத்தூணில் தீபம் ஏற்ற சுப்ரீம்கோர்ட் அனுமதி கொடுத்தும், எதிர்க்கும் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து உங்களது கருத்துக்களை, கமென்டில் பதிவிடுங்கள் வாசகர்களே!

Advertisement