கர்நாடகா முதல்வரை கண்டிக்காமல் முதல்வர் விஜய் போட்டோவுக்கு போஸ்; இபிஎஸ் குற்றச்சாட்டு
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் இரண்டு இடையீட்டு மனுக்களை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. அதுவும், இந்த இரண்டு மனுக்களை ஒரே வார்த்தையில் “Dismissed” எனக் கூறி தள்ளுபடி செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பதே இன்றைய முதல்வருக்கு தெரியாது என்பதால், Judgementல் இருந்து சில பக்கங்களை இணைத்துள்ளேன். இந்த அவமானம் “வெற்றி” மாடல் புத்தகத்தின் எந்தப் பக்கத்தில் வரப் போகிறது?
காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட மாட்டீர்கள். காங்கிரஸ் கட்சியோடு காவிரி குறித்து பேச மாட்டீர்கள். சட்டப் போராட்டத்தையும் ஒழுங்காக நடத்த மாட்டீர்கள். தமிழகத்திற்கு நேரெதிராக பேசிவரும் கர்நாடக முதல்வரை ஒரு வார்த்தை கூட கண்டிக்க வக்கில்லாமல், டில்லியில் அவரோடு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறீர்கள். ஜூன் 12ம் தேதி அன்று மேட்டூர் அணையை திறக்க முடியாமல் ஏற்கனவே குறுவை சாகுபடி வீணாகிப் போனது.
தற்போதும் கர்நாடக அரசு தண்ணீரை முழுமையாக வழங்காமல் இருப்பதாலும், நமக்கு உரிமையான நீரைப் பெற வக்கற்ற இங்குள்ள தவெக கூட்டணி அரசாலும், விவசாயிகளுக்கு தண்ணீர் வந்து சேராமல், இந்த கையாலாகாத அரசால் சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட உள்ளது. டில்லிக்கு போய் சோனியாவின் குடும்பக் கதையை கேட்டு சிரிக்க இருந்த நேரம், தமிழக விவசாயிகளைப் பற்றி பேச முதல்வர் விஜய்க்கு கொஞ்சம் கூட இல்லையா? எப்போது பார்த்தாலும் “எனக்கு எதிராக சதி செய்கிறார்கள்” என்று நீலிக்கண்ணீர் வடிப்பீர்களே.
உங்கள் ஆச்சரியக்குறி ஆட்சி தொடர்ந்து தமிழகத்திற்கு கொடுத்து வரும் அவமானங்களை எல்லாம் பார்த்தால், “உங்கள் சுயநலத்திற்காக தமிழக உரிமைகளைத் தாரைவார்க்கத் தான் ஆட்சிக்கு வந்தீர்களோ?” என்று தான் கேட்கத் தோன்றுகிறது. தமிழகத்தின் ஜீவாதார உரிமையோடு, விவசாய மக்களின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.
மேலும்
-
கொளத்தூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு; மொத்த எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு
-
50 வயதிற்குமேல் எலும்பை வலுப்படுத்தும் உணவுகள்
-
தந்தையிடம் துப்பாக்கி… அவசர உதவி எண்ணுக்கு வந்த திகிலூட்டும் அழைப்பு; அமெரிக்காவில் 4 பேர் சடலமாக மீட்பு
-
தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதி; எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல்
-
ஆண்டு 55 மேடை 3000 தலைமுறை 3
-
'குடு குடு' வயசு... 'கொடு கொடு' மனசு: இணையத்தில் இணைந்த 'இதய' கமலங்கள்