நில மோசடி வழக்கில்மேலும் ஒருவர் கைது
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் போலி இறப்பு சான்றிதழ் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்ற வழக்கில் 5 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்த நிலையில் மேலும் ஒருவரை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கோதண்டபாணிக்கு 79, ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரையில் ரூ.ஒரு கோடியில் 6 ஏக்கர் 2 சென்ட் நிலம் உள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் முருகன் மனைவி மஞ்சுளா, கோதண்டபாணி பெயரில் போலி இறப்பு சான்றிதழ் தயாரித்து நிலத்தை முதுகுளத்துார் கொழுந்துறை கோவிந்தராஜ் என்பவருக்கு பவர் பத்திரம் எழுதி கொடுத்தார். மேலும் கீழக்கரை முத்துசாமிபுரம் பாக்கியராஜ், ராமநாதபுரம் பசுபதீஸ்வரன், ரமேஷ் ஆகியோருக்கு கிரையம் செய்து கொடுத்தார்.
கோதண்டபாணி ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். குற்றப்பிரிவு போலீசார் மேற்கண்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில் போலி இறப்பு சான்றிதழ் பெற்ற மஞ்சளா, கோவிந்தராஜ் மற்றும் அவருக்கு உதவிய ராமநாதபுரம் பாப்பாக்குடி சக்திவேல், பெருங்குளம் கோவிந்தராஜ், ராமநாதபுரம் வடக்கு தெரு சங்கர் 51, ஆகியோரை கைது செய்தனர். நேற்று கொழுந்துரை குருசாமி மகன் அமுதராஜ் 40, என்பவரை போலீசார் கைது செய்தனர்.