பேரையூரில் தீயணைப்பு நிலையம் அமையுமா

பேரையூர்:

பேரையூரைச் சுற்றி சாப்டூர், வண்டாரி, எஸ். மேலப்பட்டி, சந்தையூர், வண்டபுலி, சேடப்பட்டி உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதுடன் கிணற்றில் ஆடு மாடுகள் தவறி விழுகின்றன. இப்பகுதியில் தீ விபத்து நேரிட்டால் 20 கி.மீ., தொலைவில் உள்ள டி. கல்லுப்பட்டியிலிருந்து தீயணைப்பு வாகனம் வர வேண்டி உள்ளது. வருவதற்குள் அனைத்தும் எரிந்து சாம்பலாகும் நிலை உள்ளது. கிணற்றில் தவறி விழும் கால்நடைகளை உயிருடன் மீட்க முடியாமல் போகிறது. எனவே பேரையூரை தலைமையிடமாக கொண்டு புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு முன்வரவேண்டும்.

Advertisement