போதைப்பொருள் விற்பனை தடுக்க ஆட்டோக்களில் விழிப்புணர்வு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த விழிப்புணர்வு நிகழ்வில் ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

எஸ்.பி., ஹரி கிரண் பிரசாத் பேசியதாவது: மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், போதைப்பொருட்கள் விற்பனை, பயன்பாட்டை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ‛போதைப்பொருளுக்கு இல்லை சொல்லுங்கள், பாதுகாப்பான ராமநாதபுரத்திற்கு ஆம் சொல்லுங்கள்’ என்ற வாசகத்துடன் கூடிய ஸ்டிக்கர் ஆட்டோக்களில் ஒட்டப்படுகிறது. அதில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. பொதுமக்கள் போதைப்பொருள் பயன்பாடு குறித்த தகவல்களை 77083 87580 எனும் அலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். தினமும் வட்டார அளவில் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களின் அலைபேசி எண்கள் ராமநாதபுரம் சமூகவலைதள கணக்கில் தினமும் பதிவிடப்படுகிறது. இரவில் நடக்கும் சட்டவிரோத செயல்களை அந்த எண்ணில் தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம். புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ––

Advertisement