அமைப்பு சாரா நலவாரிய முகாம்

புதுச்சத்திரம்: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, நலவாரிய அட்டை பதிவு செய்யும் முகாம், புதுச்சத்திரத்தில் நடந்தது.

புதுச்சத்திரம் டெம்போ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில், நடந்த முகாமில் கொத்தனார்கள், கம்பி பிட்டர்கள், டிரைவர், எலக்ட்ரீசியன், செங்கல்சூளை தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்து நல வாரிய அட்டை பெற்றனர்.

முகாமில் 18 வயது முதல் 58 வயது வரை உள்ள தொழிலாளர்கள், அமைப்புசாரா நல வாரியத்தில் தங்களை பதிவு செய்து கொண்டனர்.

Advertisement