போலியோ சொட்டு மருந்து முகாம் 1144 மையங்களில் துவக்கம்
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை அமைச்சர் ஜெகதீஸ்வரி, கலெக்டர் சரண்யா அறி துவக்கி வைத்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1144 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் துவங்கியது.
சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, கலெக்டர் சரண்யா அறி ராஜபாளையம் டி.பி மில்ஸ் ரோடு நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி துவக்கினர்.
இதன்படி மாவட்டத்தில் 1,30,013 குழந்தைகளுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், சாவடிகள் கோயில்கள் என 1144 சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டது.
இது தவிர ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாண்ட் பொதுமக்கள் அதிகம் கூடும் நடமாடும் முகாம் தவிர 37 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு வசதி செய்யப்பட்டது.
முகாமில் சப் கலெக்டர் முகமது இர்பான், மாவட்ட சுகாதார அலுவலர் இந்திரா, நகராட்சி கமிஷனர் முஸ்தபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.